கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!

0
203
Ganja chocolate sale!! Risk of affecting young people more!!
Ganja chocolate sale!! Risk of affecting young people more!!

கஞ்சா சாக்லேட் விற்பனை!! இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கும் அபாயம்!!

ஓசூரில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வட மாநில இளைஞர்களே அதிகம் உள்ளனர். இந்த வட மாநில இளைஞர்கள் பலரும் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு இருக்கும் சிறிய கடைகள், அரசு தடை செய்த போதும்  இவர்களை மையமாக வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வந்தன.

காவல்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது விற்பனை குறைந்துள்ளது. ஆனால் தற்போது கஞ்சா கலந்த  சாக்லேட் விற்பனை அதிகரித்துள்ளது. இதை சாக்லேட் போன்று இருப்பதால், சிறு கடைகளிலும், வீடுகளிலும் வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த சூழ்நிலை நீடித்தால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த கஞ்சா சாக்லேட்டிற்கு அடிமையாகி விடுவார்கள். இது கிடைக்காத பட்சத்தில் இவர்கள் குற்ற செயல்கள் செய்வதற்கும் வாய்புகள் உள்ளது.

இதை பற்றி அங்குள்ள பொதுமக்கள் கூறியது. சில பீடா கடைகளில் இந்த கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யபடுவதாவும், இதை வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, இங்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விற்பனை செய்கிறார்கள் என கூறப்படுகிறது. இது சாக்லேட் போன்றே இருப்பதால் இதை இயல்பாக விற்பனை செய்வதோடு, திருமணம் போன்ற விழாக்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த சாக்லேட்டை பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாகவும் அங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார்கள். காவல்துறை இதனை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்த கஞ்சா சாக்லேட்டை தடை செய்து,  இதை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

author avatar
CineDesk