இப்படி செய்தால் ஐபிஎல் போட்டி நடத்த முடியுமா? – கங்குலி புது வியூகம்

0
75

மார்ச் மாத இறுதியில் 13வது ஐபில் போட்டிகள் துவங்கவிருந்த நிலையில் கோரானா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15க்கு தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. மார்ச் 29ம் தேதி ஐபில் துவங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் கோரனாவுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து இதைப் பற்றி தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பி.சி.சி.ஐ கொரோனா கட்டுக்குள் வரும் பட்சத்தில் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் துவங்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்த முடியுமா என ஆலோசித்து வரும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, கங்குலி நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானத்தில் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதற்காக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அங்குள்ள மைதானங்களில் ஆட்களில்லாமல் போட்டி நடத்துவது குறித்து நிலைமை ஆராய்ந்து அறிக்கையாக அனுப்புமாறு பசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K