கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள்

0
93
Full-curfew on tomorrow in new dictricts
Full-curfew on tomorrow in new dictricts

கடலூர் அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை தொடர்ந்து புதியதாக முழு ஊரடங்கு விதிக்கப்படும் மாவட்டங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களிடையே சமூக விலகலை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டாலும்,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது. 

தற்போதைய நிலையில் சென்னையில் அதிக அளவாக 1,082 பேர்களும், அதனையடுத்து கோவையில் 141 பேர்களும் மற்றும் செங்கல்பட்டில் 86 நபர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக கோயம்பேடு மார்கெட் பகுதி தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.  இதனால் கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்ற 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது.  இதன் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து நகரில் மருந்து, பால் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும்.  மேலும் இந்த ஊரடங்கை மதிக்காமல மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்திலும் 29 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டிருக்கிறது.  இதன் காரணமாக திருவாரூரிலும் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  இதனால் அந்த மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறே சென்னை கோயம்பேட்டிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு சரக்கு வாகனங்கள் மூலம் சென்ற தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 20 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, கடலூர், திருவாரூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் கடலூர், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைபோலவே தென்காசி மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகமாகியுள்ளதால் அங்கேயும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் 57 நபர்களும்,தென்காசியில் 38 நபர்களும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதனால், அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளான மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.