இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
73
Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!
Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!

இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கொரோனா தொற்றானது முன்பைவிட,இந்த 2-ம் அலை அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் இல்லா பற்றாக்குறையால் மகராஷ்டிரம்,பீகார் போன்ற மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.அதனால் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் படி தமிழக முதல்வர் கூறியுள்ளார்.ஆனால் மக்கள் அதனை எதிர்த்து போராடி வருகின்றனர்.

தற்போது தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் தொற்று அதிகமுள்ள  150  மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு போடும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கும் என கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றானது அதி வேகத்தில் பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்கு போடப்போகிறார்கள் எனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர்.