அடிக்கடி இறந்து போகும் மீன்கள் – அதிர்ச்சியில் சிலியில் நாடு!

0
91

“நீரில் வாழும் மீன்களுக்கும்,நிம்மதி இல்லாத நிலை” ஏனென்றால், லாராக்கெட் ஆற்றில் வாழ்ந்து வந்த மீன்கள், கூட்டம் கூட்டமாக இறந்து கிடக்கின்றன, சிலி என்னும் நாட்டில்.

பயோ பயோ என்னும் கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு, மர்மமாக கடல்வாழ் உயிர்களும், பெருமளவில் மீன்களும் இறந்து கிடந்தன. புதிதாக இவ்வாறு நடப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இது குறித்து அவர்களிடம் விசாரித்த பொழுது : “காற்று, நீர் இவை அனைத்தும் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதால் உயிர் வாழ்வதற்கு மிக முக்கியமான ஆக்ஸிஜன் அளவு நீரில் குறைந்து இருக்கக் கூடும்” என்று சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் லாராகெட் ஆற்றின் கரையோரம் ஒதுங்கி கிடந்த மீன்களின் எண்ணிக்கை மட்டுமே சுமார் ‘3 டன்’ எண்ணிக்கை இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதற்கான காரணம் மிக விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

author avatar
Parthipan K