நோய்த்தொற்று பரவல் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! மகிழ்ச்சியில் ஏழை எளிய குடும்பங்கள்!

0
76

நோய்த்தொற்று பரவிவரும் இந்த சமயத்தில் இந்த நோய்த்தொற்று இருக்கு நாட்டில் ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகமாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் மே மற்றும் ஜூன் மாதங்களில் பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று காலத்தில் ஏழைக் குடும்பங்களின் பொருளாதார சிரமங்களை தணிப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியம் வீதம் 79.88 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி சுமார் 80 லட்சம் டன் உணவு தானியம் வழங்கப்படும் இவற்றை இலவசமாக வழங்குவதால் அரசிற்கு 25,332.92 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அந்த வங்கியில் மத்திய அரசும், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும், ஒன்றிணைந்து 94 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. இதில் எல்ஐசி மட்டுமே 49.5 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. அந்த பங்கின் அளவை குறைத்துக் கொள்வதற்கு எல்ஐசி சமீபத்தில் முடிவு செய்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்த வங்கியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஐடிபிஐ வங்கியில் புதிதாக பங்குகளை வாங்கும் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் நிர்வாகத்துடன் வங்கியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் அந்த நிறுவனம் மத்திய அரசையும் வேலை செய்யும் சார்ந்திருக்காமல் செயல்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.