ரேஷன்கார்டு உள்ளவர்களுக்கான அடுத்த இலவசத் திட்டத்தை நாளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்

0
105
Pugazhendhi Meet CM Edappadi Palaniswami-News4 Tamil Latest Online Tamil News Today
Pugazhendhi Meet CM Edappadi Palaniswami-News4 Tamil Latest Online Tamil News Today
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கப் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 2 முககவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதில் ஆரம்ப கட்டமாக சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் முககவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ரேஷன் கடைகளில் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் பிஓஎஸ் என்ற விற்பனை முனையக் கருவிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கவிருக்கும் இந்த ரேஷன் கடைகளில் இலவசமாக முக கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க உதவும் இந்த திட்டமானது ஆரம்பத்தில் கிராமப்புறங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் அறிவுரைகளை கடை ஊழியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குடும்ப அட்டை தாரர்களுக்கு மற்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் போது பிஓஎஸ் மெஷினில் இந்த இலவச முகக் கவசம் வழங்கப்பட்ட தகவல்கள் குறித்தும் பதிவு செய்ய வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.