தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

0
108

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கி அசத்திய சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அவர்கள்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா.அவர் அந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கட்டாயம் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியினார்.மேலும் அவர்களுக்கு இலவசமாக ஓட்டுனர் உரிமம் பெற உதவுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையில் மாணவர்களை சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு பழகுணர் உரிமம் வழங்கப்பட்டது.பின்பு விமலா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று மாணவர்களை வாகனங்கள் ஓட்டச் சொல்லி ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து நேற்று சிதம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில்,சிதம்பரம் ஆர்டிஓ அருணாச்சலம் மற்றும் ஆய்வாளர் விமலா முன்னிலையில் மாணவர்களுக்கு இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.காட்டுமன்னார்கோவிலில் அமைந்திருக்கும் அரசு மற்றும் கலை கல்லூரியில் 1000-க்கும் அதிகமாக பின் தங்கிய மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் சிதம்பரம் வாகன ஆய்வாளரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்று கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra