மாணவர்கள் மகிழ்ச்சி! இன்று முக்கிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
85

தமிழக அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விலை இல்லாத மிதிவண்டிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இலவச மிதிவண்டி, மடிக்கணினி, உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்துவிட்டதாகவும், இனி அது போன்ற எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தப்படாது என்றும், தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நோய்த்தொற்று காரணமாக, கடந்த 2 வருட காலமாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவை வழங்கப்படாமல் இருந்து வந்தனர்.

தற்போது 2021 22 உள்ளிட்ட கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்கு அரசு தயாராகி வருகிறது. 6 லட்சம் மாணவர்களுக்கு மிக விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதனடிப்படையில், நடப்பு வருடத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு நடுவில் அனைத்து மாவட்ட மேல்நிலைப் பள்ளிக்கூடங்களுக்கு ஏற்கனவே சைக்கிள்களின் உதிரி பாகங்கள் வந்திறங்கி விட்டனர்.

அங்கு மிதி வண்டிகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லாத மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தலைநகர் சென்னையில் இன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்தவுடன் மாநிலம் முழுவதும் இருக்கின்ற பள்ளிகளில் விலை இல்லாத மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.