பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!!

0
127
#image_title

பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக  17 லட்சம் ரூபாய் மோசடி!!

பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டை போட்ட மேன்பவர் கன்சல்டன்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது கைது.

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் “சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்” என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் தினேஷ்குமார்.

இவர் ஆன்லைன் மற்றும் தினசரி நாளிதழ்களில் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும் என்று விளம்பரம் செய்தார் இதை பார்த்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் பெண்கள் பலர் சான்றிதழ்களுடன் தினேஷ்குமார் அலுவலகத்தில் வேலை கேட்டு குவிந்தனர்.

அப்போது அவர்களிடம் முன்பதிவு கட்டணமாக ரூ2ஆயிரம் வசூலித்ததாக தெரிகிறது பின்னர் வேலை உறுதி ஆகிவிட்டது என்று ஆசை வார்த்தை கூறிய தினேஷ்குமார் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ50ஆயிரம் முதல் ரூ1லட்சத்து 50ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார்.

ஆனால் சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்த தினேஷ்குமார் திடீரென அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.  இதனால் பணம் கட்டியவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். 56க்கும் மேற்பட்டோர் இதுபற்றி கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ்குமார் கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 3 இடங்களில் அலுவலகம் நடத்தி வேலை தேடி அலையும் பட்டதாரிகளை குறி வைத்து வேலை வாங்கி தருவதாக நூதனமான முறையில் அவர்களை  ஏமாற்றி ரூ17லட்சம் வரை சுருட்டி தப்பியது தெரிந்தது அதற்கு உடந்தையாக பெண் ஊழியர் ஈஸ்வரி என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது இதையடுத்து தலைமறைவான இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தினேஷ்குமார் அரும்பாக்கம் பகுதியில் வேறு ஒரு பெயரில் அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் தினேஷ்குமார் மற்றும் ஈஸ்வரியை மடக்கி பிடித்து கைது செய்தனர் அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர்கள், பைக் ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் , பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக சொகுசு வீடு கட்டி, கார் வாங்கி ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் ஏற்கனவே இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு உள்ளது மேலும் மதுரவாயல், ஒரகடம், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் அலுவலகம் நடத்தி பல லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

author avatar
Savitha