மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?

0
72

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?

கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள பிரான்ஸ் நாட்டில் மக்கள் ஒருவருக்கு முத்தம் கொடுத்துக் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2800 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் சீனாவில் மட்டுமே இருந்தாலும், அந்த வைரஸ் சம்மந்தமான பீதி உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியைக் கிளப்பி வருகிறது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் இந்த நோய் தாக்குதல் 100க்கும் மேற்பட்டோருக்கு இருப்பதாகக் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களையும் அரசையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை சில ஆலோசனைகளை கூறியுள்ளது.

அதன் படி ‘மக்கள் அதிகமாக ஒரு இடத்தில் கூடுவதைத் தவிருங்கள். மேலும் சந்திப்பின் போது மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிப்பது, கைகுலுக்குவது மற்றும் கன்னங்களை உரசி முத்தமிடுதல் ஆகியவற்றைத் தவிருங்கள்’ என கூறியுள்ளது. முத்தம் கொடுத்தல் மற்றும் தொடுதல் மூலம் இந்த வைரஸ் தாக்குதல் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுவதால் இந்த அலோசனைகளை வழங்கியுள்ளது.

author avatar
Parthipan K