மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! 

0
203

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்!

கேரளா அரசை போல் தமிழ்நாடு அரசும் மாணவிகளின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் மாணவிகளின் நலனை முன்னிறுத்தி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மைய்யம் தெரிவித்துள்ளது.

இது பற்றி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேரளாவில் உள்ள அனைத்து   கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரியாக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ள கேரளா அரசை மக்கள் நீதி மைய்யம் பாராட்டுகிறது.

கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை மாநிலம் முழுவதிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த கேரளா அரசு விரிவுபடுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க இதுபோன்ற முன்மாதிரி திட்டங்கள் அவசியம்.

தமிழ்நாட்டிலும் மாணவிகளின் நலன் கருதி இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசும், கல்வித் துறையும்,   இதற்கு முன்வர வேண்டும். என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.