சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றிலேயே முதல் முறையாக…! வெளியான ருசிகர தகவல்!

0
67

தமிழகத்தில் தமிழ்நாட்டிற்கு விரோதமான பல செயல்களை மத்திய அரசு செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த நீட் நுழைவுத் தேர்வு என்று சொல்லப்படுகிறது.

இந்த நீட் நுழைவுத் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாணவ, மாணவிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். .

ஆகவே இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

ஆனாலும்கூட கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இந்த சட்ட மசோதா சுமார் 142 நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் மீண்டும் மாநில அரசுக்கு ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த மாநில அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது.

மேலும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தார் முதலமைச்சர் ஸ்டாலின், அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில், இன்றைய தினம் தமிழகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

நீட் விலக்கு சட்ட மசோதாவை மறுபடியும் நிறைவேற்றும் விதத்தில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்றைய தினம் நடந்து வருகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் தான் தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சட்ட முன்வடிவை மறுபடியும் நிறைவேற்றுவதற்காக கூடும் கூட்டமாகும். அதுமட்டுமல்லாமல் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்முறையாக ஜார்ஜ் கோட்டை சட்டசபை அரங்கில் நடைபெறும் முதல் கூட்டம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.