இந்தியாவிற்கு இது சுதந்திர தினம் அல்ல கருப்பு தினம்! ட்ராபிக் ராமசாமி ஆவேச பேச்சு!

0
73

இந்தியாவில் சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், நேற்று சுதந்திர தினத்தை இந்தியாவில் மக்கள் அனைவரும் கொண்டாட கொரோனா தாக்கத்தால் பெரும் விழாவாக கொண்டாட முடியவில்லை. இருப்பினும் ஆங்காங்கே மக்கள் அவர்கள் இருப்பிடத்தில் இருந்தபடி கொண்டாடினர்.

இந்த நிலையில் சுதந்திர தினம் குறித்து ட்ராபிக் ராமசாமியிடம் கருத்து கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்று என்பது ஒரு நோயே அல்ல. அது மத்திய மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தொற்று வியாதி. அந்தக் காலத்தில் தட்டம்மை காலரா போன்ற நோய்கள் வந்து அப்போதெல்லாம் இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்படவில்லை.

இது இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்து விட்டார்கள்.

இது உண்மையான சுதந்திரம் அல்ல இது மிகவும் மோசமான சுதந்திரமும் அல்ல. ஆங்கிலேயர்கள் ஆட்சியினை ராஜாஜியிடம் கொடுத்து விட்டுச் சென்றார்கள். அந்த சுதந்திரத்தினை காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுகள் படுகுழியில் தள்ளி விட்டன.

இந்தியா நேரு காலத்தில் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இந்திராகாந்தி ஆட்சியிலும் சுமாராக இருந்தது. ஆனால் அதன் பிறகு வந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுகளால் நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் தற்போது சசிகலாவின் தயவால் பழனிச்சாமி ஆட்சி செய்து வருகிறார். இவர் தற்போது அம்மாவின் ஆட்சி என்று கூறுகிறார். அம்மாவை குற்றவாளி ஆகி விட்டதால் தற்போது குற்றவாளி ஆட்சிதான் நடைபெறுகிறது. இவர்கள் தேச துரோகிகள். இது நமக்கு சுதந்திர தினம் அல்ல; கருப்பு தினம். தேசியக்கொடிக்கு நாம்தான் மதிப்பு கொடுக்க வேண்டும் அரசு அல்ல.

மேலும் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாதபடி செய்த அரசு, அடக்குமுறை தான் இது. சுதந்திரதினம் மக்களுக்கானது. அடக்குமுறையில் வைத்திருக்கும் இவர்கள் தேசத் துரோகிகள். மேலும் இது குறித்து நான் வழக்குத் தொடர இருக்கிறேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு” என ட்ராபிக் ராமசாமி மிகுந்த ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

author avatar
Parthipan K