அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!

0
112

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!

சேலத்தில் வெள்ளி கொலுசுகளின்  ஆர்டர் வரிசை வரிசையாக குவியத் தொடங்கியது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி தொழில் செய்யும் தொழிலாளர்கள் உற்பத்தியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள். கேரளாவில் வரும் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநில வெள்ளி வியாபாரிகள் வெள்ளி கொலுசும்,அரைஞான் கொடி என பல வகையான ஆர்டர் சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு பட்டறை உரிமையாளர்களுக்கு தொடர்ந்து வருகின்றனர்.இதனால் ஊழியர்கள் விறுவிறுப்பாக கொலுசுகளை தயார் செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது,இந்த மாதங்களில் தான் வெள்ளி கொலுசுகளின் ஆர்டர் வழக்கத்திற்கு அதிகமாக வந்திருக்கின்றனர்.ஆனி மாதத்திற்கு பின் ஆர்டர்கள் சற்று குறைவாக தான் காணப்பட்டது.

அதும் ஆடி மாதம் வந்தால் சுத்தம்..! இதனால் அந்த மாதங்களில் விடுமுறை அளிப்பப்படும்.ஆனால் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருச்சூர்,திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்து வெள்ளி கொலுசுகளின் ஆர்டர் வர தொடங்கியது.கேரளா டிசைனில்,கொலுசு ரெடி செய்கின்ற மணியனூர் ,ரெட்டியூர் ,காட்டூர்,  கரட்டூர் உள்ளிட்ட பல பட்டறைகளில் தொழில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

வழக்கமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 25 ஆயிரம் வெள்ளி கொலுசுகள் ஆர்டர் கிடைக்கும்.கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்து ஆண்டு 10 ஆயிரம் ஆர்டர்கள் மட்டுமே கிடைத்தது.இதனால் பாதியாக கொலுசு தொழில் குறைந்தது.தற்போது பத்து சதவீதம் ஆர்டர்கள் மட்டும் வந்திருக்கும் நிலையில் இன்னும் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளன.

இந்த வார இறுதிக்குள் மேலும் சில ஆர்டர்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இவ்வாறு சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியிருந்தார்.மேலும் நேற்று முன்தினம் வெள்ளி கிராம் 60ரூபாய்க்கும், பார்வெள்ளி 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நேற்று கிராமிற்கு 20 காசு குறைந்து 59.80 ரூபாய்க்கும்,பார்வெள்ளி 2000 ரூபாய் குறைந்து 58 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.மேலும் வெள்ளி கொலுசுகள் விற்பனையும் மற்றும் ஓணம் பண்டிகையையும் கொண்டாட மக்கள் ஆர்வமாக இருப்பது தெரிகிறது.

author avatar
Parthipan K