பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்!

0
161
#image_title

பிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்! இந்த பாதிப்பில்லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு அவசியமான பொருளாக அனைவர் வீட்டிலும் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் மருந்து பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், சமைக்கப்படாத உணவுகள் வைப்பதற்கு மட்டும் தான் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் சமைத்த உணவுகளை ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் கூட சாப்பிட தொடங்கி விட்டோம்.

மேலும் காய்கறிகள் ,பழங்கள், போன்ற எந்த ஒரு பொருள் எடுத்தாலும் நாம் பிரிட்ஜில் வைப்பதுண்டு. நாம் உணவிற்கு பயன்படுத்தும் காய்கறிகளில் வெங்காயத்தை ப்ரிட்ஜில் வைப்பது தவறாகும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள போலிக் ஆசிட், சிற்றசின் போன்ற சத்துக்கள் குறைந்து போய்விடும். மேலும் தக்காளி, கத்தரிக்காய், பூசணிக்காய் ,கிழங்கு வகைகள் உதாரணமாக உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

மேலும் சிட்ரஸ் பழங்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக எலுமிச்சை, சாத்துக்குடி ,கமலா ,ஆரஞ்சு, இது போன்ற சிட்ரஸ் பழங்களை வைக்கக் கூடாது. தர்பூசணி ,முலாம்பழம், இதுபோன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்களை வைத்து பயன்படுத்தக் கூடாது. மேலும் வாழைப்பழத்தை பழுப்பதற்காக பிரிட்ஜில் வைப்பதுண்டு ஆனால் இது முற்றிலும் தவறு. மேலும் பழங்களை நறுக்கி வைப்பதால் மற்ற பழங்களில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த பழங்களில் இருக்கும். இதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

சூடான பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. ஏனெனில் பொருட்கள் கெட்டுப் போவது மட்டுமல்லாமல் பிரிட்ஜின் வெப்பநிலையை மாற்றுகிறது.மேலும் கூல்டிரிங்ஸ் ,தேன், பாதாம் ,பேரிச்சம்பழம், கேக், பிரட், போன்றவைகளை பொருட்களை ப்ரிட்ஜில் வைக்க கூடாது இதை நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.

author avatar
Parthipan K