வெள்ள சேத பாதிப்பு! சென்னை வந்தது மத்திய குழு!

0
72

தமிழ்நாட்டிலுள்ள இருக்கக்கூடிய வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக  மத்திய குழுவினர் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து இன்றும், நாளையும், பல மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக, திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகப் பெரிய சேதம் ஏற்படுத்தி இருக்கிறது. வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீண் ஆகியிருக்கின்றன சாலை உள்ளிட்ட பல ஊர் கட்டமைப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இவற்றில் சீரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும், நிவாரணம் வழங்கவும், மத்திய அரசிடம் தமிழக அரசு சுமார் 2629 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வெள்ள  சேதங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜேஷ் சர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்பி கவுல், மத்திய வேளாண் அமைச்சக இணை இயக்குனர் விஜய் ராஜ் மோகன், மத்திய மின் துறை அமைச்சக உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சக செயலாளர் வரப்பிரசாத், மத்திய நீர்வள அமைச்சகம் இயக்குனர் தங்கமணி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல அலுவலர் ரணஞ்செய்சிங் ,உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றன. புகைப்பட கண்காட்சி குழுவினர் நேற்று பகலில் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர். தமிழக உயர் அதிகாரிகள் அவர்களை வரவேற்று மத்திய குழுவினருடன் தமிழக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், இயக்குனர் சுப்பையன், போன்றோர் பங்கேற்றார்கள்.

இதன் பிறகு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வெள்ள சேத புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவற்றை மத்திய குழுவினர் பார்வையிட்டனர், சென்னையில் மண்டல வாரியாக உண்டான பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களை காண்பித்து மத்திய குழுவினருக்கு மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி விளக்கமளித்தார்.

மத்திய குழுவினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இன்றும், நாளையும், வெள்ள சேத பாதிப்புகள் மற்றும் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய இருக்கின்றன முதல் குழுவினர் இன்று செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல இருக்கின்றன. பிற்பகலில் புதுச்சேரி செல்லும் அவர்கள் நல்ல சேதங்களை ஆய்வு செய்த உடன் இரவு அங்கேயே தங்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

நாளைய தினம் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு திருச்சியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வர இருக்கிறார்கள். சாலை மூலமாக இரண்டாவது குழுவினர் இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி செல்ல இருக்கிறார்கள், அங்கிருந்து சாலை மூலமாக சென்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய இருக்கிறார்கள், இரவு தூத்துக்குடியில் தங்கி விட்டு நாளை காலை விமானத்தில் சென்னை திரும்பயிருக்கிறார்கள். பின்னர் சென்னையில் இருந்து சாலை மூலமாக, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று அங்கே ஆய்வு ஆய்வு செய்ய இருக்கிறார்கள். அங்கிருந்து அன்று இரவே சென்னைக்கு திரும்பும் அவர்கள் 24ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்ய இருக்கிறார்கள் ஆய்வை முடித்துக்கொண்டு அன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தின் மூலமாக டெல்லிக்கு செல்ல இருக்கிறார்கள்.