தட்டையான மார்பகங்கள், திருமணத்திற்கு கவர்ச்சியாக இருக்காது- தன்சானியாவின் அதிபர்!

0
89

பெண்கள் கால்பந்து வீரர்களை தட்டையான மார்பகங்களை உடையவர்கள், அதனால் அவர்கள் மற்ற ஆண்களால் திருமணத்திற்கு கவர்ச்சிகரமாக இருக்க மாட்டார்கள் என அவரது அவதூறு பேச்சை பரப்பியதால் தான்சானியாவின் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் இப்பொழுது மிகவும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22), ஒரு பிராந்திய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஒரு தேசிய ஆண்கள் அணியின் வெற்றியை கொண்டாடும் விழாவின் போது, ​​சாமியா கூறியதாவது “தட்டையான மார்பு உள்ள அவர்கள் ஆண்கள் , பெண்கள் அல்ல என்று நீங்கள் நினைக்கலாம்.” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், நீங்கள் அவர்களின் முகங்களைப் பார்த்தால், நீங்கள் ஆச்சரியப்படலாம் . ஏனென்றால் நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், கவர்ச்சிகரமான ஒரு பெண்ணை தான்,மேலும் நீங்கள் விரும்பும் குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை தான் விரும்புகிறீர்கள், “என்று அவர் கூறினார், பெண் கால்பந்து வீரர்களிடம் “அந்த குணங்கள் மறைந்துவிட்டன” என்று அவர் கூறியுள்ளார்.

 

இன்று அவர்கள் நாட்டிற்கு கோப்பைகளை கொண்டு வரும்போது ஒரு தேசமாக எங்களை பெருமைப்படுத்துகிறார்கள், ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் அவர்களின் வாழ்க்கையை பார்த்தால், கால்கள் விளையாடி சோர்வு அடைந்த பொழுது, ​​அவர்களுக்கு விளையாட உடல்நலம் இல்லாதபோது, ​​என்ன வாழ்க்கை அவர்கள் வாழ்கிறார்கள்? ” என வினவி உள்ளார்.

 

திருமண வாழ்க்கை அவர்களுக்கு ஒரு கனவு போன்றது. ஏனென்றால் உங்களில் ஒருவர் அவர்களை உங்கள் மனைவியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றாலும், அவர்கள் ஒரு பெண்ணா அல்லது உன்னுடன் இருக்கும் ஆண் நண்பரா என்று உங்கள் தாய் கேட்பார்கள் என அவதூராக பேசி உள்ளார்.

 

பெண்கள் கால்பந்து வீரர்கள் பற்றி அவர் பேசிய வீடியோ வைரலான பிறகு ஹசன் சொன்ன கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்து வருகிறார்கள்.

 

இந்தப் பெண் தான்சானியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற விரும்புகிறார் … எங்களுடைய பெண்களின் உரிமைகள் எங்கே. இன்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்படுகிறது.

 

ஜனாதிபதி சாமியாவின் கருத்துக்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது. தான்சானியாவில் உள்ள அனைத்து பெண் கால்பந்து வீரர்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வடிவம் மற்றும் தட்டையான மார்புப் பிரச்சினை எங்கே ஏற்படுகிறது? இப்படி பேசும் ஒரு தலைவர் எப்படி வீரர்களை ஊக்குவிப்பார்? மேலும் எப்படி ஏழையான இந்த மாநிலத்தை உயர்த்துவார் என்று கேள்வி கேட்டுள்ளார்.

 

எத்தியோப்பியாவின் ஜனாதிபதி சாஹ்லே-ஒர்க் ஜெவெடேவுடன் ஆப்பிரிக்காவில் தற்போது பணியாற்றும் ஒரே பெண் தலைவராக ஹசன் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
Kowsalya