பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை! காரணம் என்ன?

0
65

பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை! காரணம் என்ன?

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து தமிழகத்தில், கடந்த 1ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு, வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

வாக்குச்சாவடிகள் பெரும்பாலும், பள்ளிகளில் அமைக்கப்பட்டு, தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறும். மேலும், தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவர். இதனால் பள்ளிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வருகிற 19-ந் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை வழக்கம் போல் விடுமுறை. இதையடுத்து ஒருநாள் கழித்து செவ்வாய்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

இதனால் வாக்கு எண்ணிக்கையின் போதும் ஆசிரியர்களே வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட உள்ளனர். எனவே வாக்கு எண்ணிக்கை முடிந்து அடுத்த நாள் புதன்கிழமை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதன்கிழமை அன்று ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, வாக்குபதிவு நாளான பிப்ரவரி 19-ந் தேதி முதல் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை என மொத்தம் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K