மகாராஷ்டிரத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

0
72

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக மகாராஷ்டிரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதால் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளிகளும், 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில், கொரனோ பரவல் அதிகரித்த போது அதை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. மும்பை உட்பட்ட மாநிலத்தின் பல பகுதிகளில், கொரனோ பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திங்கள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் வர்சா கெயிக்வாட் அறிவித்தார்.

அதன்படி மும்பை, நாக்பூர், நாசிக், உட்பட மாநிலம் முழுவதும் மழலையர் பள்ளிகளும், தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்றும், வரும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் பெற்று வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனே, அவுரங்காபாத், மாவட்டங்களில் கொரனோ பரவல் அதிகம் உள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்கப்பட வில்லை.