உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

0
52

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி! ஒப்புதல் வழங்கினார் அதிபர்!!

பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் இன்றுவரை ஆண்களே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அந்த நாட்டின் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆயிஷா மாலிக் லாகூரில் உள்ள பாகிஸ்தான் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பும்,  ஹார்வர்டு சட்டப் பள்ளியில் தனது சட்டப் படிப்பையும் முடித்திருக்கிறார். 2012-ல் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் ஆயிஷா மாலிக். லாகூரில் உள்ள பெண் நீதிபதிகள் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இவர் இருந்து வருகிறார்.

55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் அவரை பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க தேர்வு செய்து பரிந்துரை செய்தது உயர்மட்ட குழு. இதற்கான ஒப்புதலை பாகிஸ்தானின் சட்ட கமிஷனும் வழங்கியது. இதன் காரணமாக பாகிஸ்தானின் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியாக விரைவில் அவர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டே ஆயிஷா மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், மற்ற நீதிபதிகளை காட்டிலும் குறைவான வயதுடையவரை ஏற்க முடியாது என மற்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரின் பெயர் பரிந்துரையில் உறுதியாக இருந்தால் சட்ட கமிஷனை புறக்கணிக்க இருப்பதாகவும் பார் கவுன்சில் அறிவித்து இருந்தது.

இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்ற குழு இதை பரிசீலித்தது. லாகூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் 4-வது இடத்தில் இருந்த ஆயிஷா மாலிக்கை தேர்வு செய்து அதிபரின் ஒப்புதலுக்கு அந்த குழு அனுப்பி வைத்தது. இந்நிலையில் ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

author avatar
Parthipan K