” மக்களே உஷார்” ” கருப்பு பூஞ்சை தொற்று” தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

0
65

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வட மாநிலங்கள் பஞ்சாப் ,ஹரியானா கர்நாடகா ,மகாராஷ்டிரா, பீகார், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சைத் தொற்று பரவி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் முதல் பலி பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் 57 வயதுடைய அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பொழுது கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

கடந்த 17ஆம் தேதி தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று சென்னையிலும் கொரோனா நோய்க்கு ஆளாக்கப்பட்டு கருப்பு பூஞ்சைத் தொற்றால் நோய்வாய்ப்பட்ட சர்க்கரை நோயாளிகள் 5 பேர் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாக தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

இந்த கருப்பு பூஞ்சை தொற்று காது மூக்கு தொண்டை ஆகியவற்றை முதலில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கண் பார்வையை இழக்க கூடும் என்றும் தகவல்கள் பரவுகின்றன.ண

நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து உயிரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது.

author avatar
Kowsalya