முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்! ராஜஸ்தான் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

0
147
#image_title

முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்! ராஜஸ்தான் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் மின்சாரம் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் அறிவித்துள்ளார்.

இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட் அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுவதைப் போலவே ராஜஸ்தான் மாநிலத்திலும் 100 யூனிட் மின்சாரம் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதனால் அந்த 100 யூனிட் மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை மக்கள் கட்ட தேவையில்லை. அதாவது மக்கள் பயன்படுத்தப்படும் 100 யூனிட் மின்சாரத்துக்கு கூடுதலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்த தேவையில்லை.

இதே போன்று 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதுடன் நிலையான கட்டணம், பிற கட்டணங்கள் உள்ளிட்டவை 200 யூனிட் மின்சாரத்துக்கு தள்ளுபடி செய்யப்படும். அவர்களுக்கான மின்சாரத் தொகையை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் “பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டு, பொதுமக்களிடம் பேசியபோது, ​​மின் கட்டணத்தில் ஸ்லாப் வாரியாக விலக்கு அளிக்கும் வகையில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. மே மாதத்தில் மின் கட்டணத்தில் எரிபொருள் கூடுதல் கட்டணம் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாதம் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோரின் மின் கட்டணம் பூஜ்ஜியமாக இருக்கும். அவர்கள் எந்த கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்த வேண்டியதில்லை. மாதம் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக நடுத்தர மக்கள், மாதத்திற்கு 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம், 200 யூனிட் வரை நிலையான கட்டணம், எரிபொருள் கூடுதல் கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும். மாநில அரசால் செலுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பேரணி ஒன்றில் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸ்க்கு எதிராக வன்மையாக பேசியதை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.