தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு!

0
84

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு!

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவாகரத்தில் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொலை முயற்சி மற்றும் ஆயுதம் பயன்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மயிலாடுதுறை, நாகை, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா அருகே அதாவது சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகை நிறுத்துமாறு சமிக்கை விடுத்துள்ளனர். இது இந்திய கப்பல் என தெரியாமல் அந்தப் பகுதியில் இருந்து கரையை நோக்கி வேகமாக செல்லும் போது படகை நிறுத்தாததால் இந்திய கடற்படை கப்பல் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். குண்டு மழை பொழிந்ததில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் தொடை மற்றும் வயிறு பகுதிகளில் துப்பாக்கி கொண்டு பாய்ந்துள்ளது. அடுத்து மீட்கப்பட்ட படகில் ஏறி இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மீனவரை உடனடியாக கரைக்கு கொண்டு வந்து அவருக்கு ராமேஸ்வரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தற்போது மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தில் சில மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கப்படுகின்றன. இதை எடுத்து அந்த மீனவர்கள் நாகைப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று நள்ளிரவு கொண்டுவரப்பட்டனர். தமிழக மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையின் மீதுவழக்கு பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி மற்றும் ஆயுதம் பயன்படுத்தியது என நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படகில் உள்ள துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி அதனை இந்திய கடற்படையினரது தானா? என ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K