Breaking News
திரைப்பட சூட்டிங் அரங்கில் தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !!

திரைப்பட சூட்டிங் அரங்கில் தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !!
திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் திரைப்பட நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளிவரும் பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்திருந்தது.மிக சுவாரசியமாக பெரிய மாளிகை கொண்ட அரங்கில் சூட்டிங் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
அதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் வெளியே ஓட்டம் பிடித்தார்கள்.இந்நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்பெயின் நாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வேலை முடித்து விட்டு மும்பை திரும்பினார்கள்.
அவர்கள் இந்த படபிடிப்பில் நடிப்பதற்காக வந்ததாக தெரிகிறது. படிப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ மளமளவென எல்லா இடங்களுக்கும் பரவியது.பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்.
நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால் சூட்டிங்காக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்து தீயினால் கருகியது.மேலும் அந்த இடம் முழுக்க கரும்புகை சூழ்ந்தது போல் காணப்பட்டது.