புனே எம்ஐடிசி ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! வீடியோ உள்ளே

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பத்லாப்பூரில், எம்ஐடிசி என்ற வளாகத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அங்குள்ள ட்ரையரில் இன்று காலை 9 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்ததில், பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்தால் எந்த ஒரு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மக்கள் ரசாயன தொழிற்சாலைக்கு வெளியே அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்து நடந்த பொது ஆலையில் பல ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட தடிமனான கருப்பு புகை அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதே போல கடந்த மாதத்தில், புனேவில் உள்ள மார்க்கெட்டியார்ட் என்ற பகுதியில் ஒரு பெரிய மூன்று மாடி குடோனில் இதே போன்ற தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீ விபத்தினால் யாரும் தீக்காயங்களுக்கு ஆளாகவில்லை.

அதே போல இந்த மாத தொடக்கத்தில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் கொல்லப்பட்ட சோகமான சம்பவமும் நடந்துள்ளது.இவ்வாறு விசாகபட்டினம் பாலிமர்ஸ் ஆலை எரிவாயு கசிவு விபத்தை தொடர்ந்து, நாட்டில் ஊரடங்கிற்கு பின்னர் நிறுவனங்கள் உற்பத்தித் தொழில்களை மறுதொடக்கம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டது.

அரசு வெளியிட்டுள்ள அந்த வழிகாட்டுதலில் நிறுவனங்கள் ஆரம்பத்தில் அதிக உற்பத்தி இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டாம் என்றும், ஆபத்தை குறைக்க முதல் வாரத்தை சோதனை அல்லது சோதனை ஓட்ட காலமாக கருத வேண்டும் என்றும் மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
WhatsApp chat