வாரத்தில் நாலு! தினமும் ஆறு!! வேலை நேரத்தை குறைத்த பின்லாந்து பிரதமர்?

0
142

வாரத்தில் நாலு! தினமும் ஆறு!! வேலை நேரத்தை குறைத்த பின்லாந்து பிரதமர்?

ஒரு வாரத்தில் நான்கு நாட்களும், அந்த நான்கு நாட்களில் ஆறு மணி நேரம் மட்டுமே வேலை இருந்தால் போதும் என்ற திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம் பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார்.

ஊழியர்களின் வேலை நாட்களை குறைப்பதோடு, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு நடைமுறைபடுத்துவதால் மக்கள் தங்களின் குடும்பங்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதுடன் கலை, அறிவியல் மற்றும் விருப்பமான பொழுதுபோக்கு விசயங்களில் நேரத்தை செலவிட வழிவகுக்கும் என கூறியுள்ளார்.

பணியாளர்களின் வேலை நேரத்தை குறைத்து சம்பளத்தை குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு பல்வேறு சுமை கூடும் என்று சர்ச்சை எழுந்தாலும், விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் புத்துணர்வுடன் வேலை பார்க்கும் ஊழியர்களால் உற்பத்தி கூடும் என்ற ஆதரவு கருத்துக்களும் எழுந்துள்ளது.

இந்திய நாட்டில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் வேலை நேரத்தையும் குறைத்தால் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

author avatar
Jayachandiran