மீண்டும் கட்டாயமாக்கப்படும் முகக் கவசம்! மீறினால் அதோகதிதான்!

0
61

தற்போது மீண்டும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது அதில் தலைநகர் டெல்லியில் முக்கிய பங்கு வகிக்கிறது. வடமாநிலங்களில் மிகவேகமாக தற்சமயம் இந்த நோய்த்தொற்று பரவி வருகிறது.

இதனை அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் எச்சரித்து கவசம் அனைவரும் அணிய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றன.

அதன்படி தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்பது மட்டுமே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

ஆனால் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படவில்லை. அவரவர் அவரவர் உயிர்மேல் ஆசையிருந்தால் நிச்சயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

உலகம் முழுவதும் நோய்த் தொற்று பாதிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்சமயம் மீண்டும் அந்த நோய் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது.

ஒமைக்ரான் அதிகமாக பரவி வந்தாலும் கூட இதனால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக, இந்த நோய்த்தொற்று பரவல் மார்ச் மாதத்தில் குறைந்தது.

இந்த சூழ்நிலையில், கேரளா மற்றும் டில்லியில் தற்சமயம் மீண்டும் இந்த நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக 4வது அலையின் வருகை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்று பாதிப்புகளை தொடர்ந்து முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை மீண்டும் அமலுக்கு வந்திருக்கிறது.

முதலாவதாக டெல்லி அரசு இந்த விதிமுறையை மறுபடியும் அமல்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும், அதை மீறும் பட்சத்தில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தற்சமயம் தெலுங்கானா மாநிலத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலத்தில் தினசரி நோய் தொற்று பாதிப்பு 20 முதல் 30 வழக்குகள் வரை பதிவாகி வருகிறது.

இதனையடுத்து தெலுங்கானாவில் நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவில்லை என்றும், முகக் கவசம் அணியவில்லையென்றால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.