கொரோனா காரணமாக ரூ.19.26 கோடி அபராதம் வசூல்!

0
65

உலக நாடுகளின் பட்டியலில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களிடையே கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது.

ஆனாலும் மக்கள் இதனையும் மீறி வெளியே செல்கின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை மீறிய காரணத்தால் இதுவரை 9,22,070 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர், ஜாமீனில் விடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரத்தில் மட்டும் 2,884 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 6,58,745 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் 1,061 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விதிகளை மீறியதற்காக இதுவரை மொத்தமாக 8,38,141 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் 2,706 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதுவரை ரூ.19.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K