25 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம்!! நாயகனாக கலக்கப் போவது யாரு நவீன் அறிமுகம்!!

0
206
Film made in 25 days!! Yaru Naveen who is going to mix as the hero!!
Film made in 25 days!! Yaru Naveen who is going to mix as the hero!!
25 நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம்!! நாயகனாக கலக்கப் போவது யாரு நவீன் அறிமுகம்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த நவீன் கதாநாயகனாக திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். காட்டேஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள நவீன் சினிமா துறையில் நுழைந்துள்ளார்.
இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாவம் கணேசன் தொலைக்காட்சி தொடரில் நாயகனாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இதையடுத்து இவர் சினிமா துறையில் நுழைந்துள்ளார்.
நவீன் நடித்துள்ள காட்டேஜ் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆர்யா செல்வராஜ் நடித்துள்ளார். மேலும் கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இருவரும் சேர்ந்து காட்டேஜ் திரைப்படத்தை இயக்குகின்றனர். கட்டேஜ் திரைப்படத்திற்கு செந்தமிழ் இசை அமைக்கிறார்.
இந்த காட்டேஜ் திரைப்படத்தை பற்றி இயக்குநர் சதீஷ் கீதா குமார் “ஒரு காட்டேஜ் அதில் ஒரு தம்பதி இருக்கின்றனர். அந்த தம்பதியை அமானுஷ்யமாக பின்தொடரும் ஒரு மனிதன், அப்போது நடக்கும் கொலை, அந்த கொலையை யார் செய்தது என்பதை காண்பிக்கும் வகையில் பரபரப்பாக சொல்லும் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம்தான் காட்டேஜ். திரைப்படம் முழுவதும் ஊட்டியை சுற்றியே நடக்கும் கதை. இந்த காட்டேஜ் திரைப்படத்தின் மொத்த படிப்பும் 25 நாட்களில் எடுத்து முடித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.