ஆளுங்கட்சியின் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! மண்டை உடைக்கப்பட்டது ரத்தவெள்ளத்தில் திமுகவின் நிர்வாகி!

0
75

சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் நடந்தது அந்த சமயத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவினர் இடையே மோதல் உண்டானதை தொடர்ந்து ஒருவருக்கு மண்டை உடைக்கப்பட்டது.சிவகங்கை தொகுதி சாலையில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு மற்றும் நிர்வாக பொறியாளர் அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் 27 குடிநீர் பராமரிப்பு பணிகள், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 6 குடிநீர் பராமரிப்பு பணிகள் என்று மொத்தம் 33 பணிகளுக்கு 3.5 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.

இதில் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தரப்பினருக்கும், சிவகங்கை ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தரப்பினருக்கும், இடையில் வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் அதிகமாகவே இரண்டு தரப்பினர் இடையே கைகலப்பு உண்டானது. இதில் சோமனின் மண்டை உடைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய ஆதரவாளர்கள் எதிர்தரப்பினர் அவர்களின் காரைச் சேதப்படுத்தினர் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். காயமடைந்த சோமன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் டெண்டர் விடுவதில் ஊழல் நடந்திருக்கிறது என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது டெண்டர் எடுப்பதில் தன்னுடைய கட்சிக்காரர்களை இப்படி மூன்றாம்தர ஆட்களைப்போல அடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.இந்த டெண்டர் விஷயங்களில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் பல்வேறு குறைகளை தெரிவித்து வந்த ஸ்டாலின் தற்போது தன்னுடைய கட்சிக்காரர்கள் செய்யும் இது போன்ற கீழ்த்தரமான செயலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற தரப்பிலும் அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.