ஐ.பி.எல்க்கு முக்கியத்துவம் கொடுத்த பிசிசிஐ! கோபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

0
91

இந்தியா இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது கோழி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. மழையின் காரணமாக, முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அதேபோல லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இதன் காரணமாக, இந்த தொடரில் இந்திய இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இருக்கின்ற ஒல்டு டிராபார்டு மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெறுவதாக இருந்தது. ஆனாலும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நோய்த்தொற்று பாதிப்பின் காரணமாக, ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 59 வயது ஆன ரவி சாஸ்திரிக்கு கடந்த சனிக்கிழமை நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடைய நெருங்கிய தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோருக்கும் நோய் தொற்று பாதிப்பு உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். அதோடு அணியின் பிசியோதெரபிஸ்ட் நித்தின் பட்டேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தான் இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. அவர் இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றியதன் காரணமாக, அணியினர் எல்லோருக்கும் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதோடு நோய் தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் எல்லோரும் விடுதியின் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இதன் காரணமாக, இந்திய அணியினர் யாரும் பயிற்சியில் ஈடுபட வில்லை என்று தெரிகிறது, பயிற்சி மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசனை செய்து வருகிறது.இருந்தாலும் இந்திய அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட நோய்த்தொற்று பரிசோதனையில் யாருக்கும் நோய்த்தொற்று உறுதியாகவில்லை என்று சோதனை முடிவுகள் வெளிவந்து இருக்கிறது. ஆனாலும் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.

இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.இந்த சூழ்நிலையில்தான் இந்த மாதம் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் துபாயில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து போட்டியின் மூலமாக இந்திய வீரர்கள் பலருக்கு நோய்தொற்று பரவினால் அது ஐபிஎல் போட்டிகளை பாதிக்கும் என்று பிசிசிஐ தன்னுடைய கவலையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கூறியிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரை விட ஐபிஎல் போட்டிக்கு பிசிசிஐ நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக, 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடைபெறவில்லை என்றால் எங்களுக்கு ஏற்படும் வருமான இணைப்பான 304 கோடி ரூபாயை பிசிசிஐ கொடுக்க வேண்டும், அதோடு 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.