“தீபாவளி பண்டிகை” எந்த நாட்களில் எந்த பூஜை செய்தால் செல்வம் பெருகும்!

0
194
"Festival of Diwali" on which days any pooja will increase wealth!

“தீபாவளி பண்டிகை” எந்த நாட்களில் எந்த பூஜை செய்தால் செல்வம் பெருகும்!

தமிழகத்தில் மட்டும் தான் தீபாவளியை ஒரு நாளுடன் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். வடமாநிலங்களில் நரகாசுர வதம் செய்தல் எனத் தொடங்கி மார்கழி  புத்தாண்டு, பகிபீச் என ஒரு வார காலம் தினசரி பூஜை செய்து கொண்டாடுவர். அந்த வகையில் இவர்களின் கணக்குப்படி 23ஆம் தேதியே தீபாவளி ஆரம்பித்து விடும்.

பிறகு 26 ஆம் தேதி தான் தீபாவளி முடியும். இது நடுவில் பையா தூஜ் பண்டிகை, கோவத்ச துவாதசி, தனத் திரயோதசி, கோவர்த்தன பூஜை காளி பூஜை, யம துவிதியை என கொண்டாடுவர்.

முதலில் தன திரயோதசி பூஜை:

இந்நாளில் வட மாநிலத்தை சேர்ந்த பலர் முதலீடு செய்வது வழக்கம். இந்நாளில் எது செய்தாலும் தொட்டது விளங்கும் எனக் கூறுவர். அதனால் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 23ஆம் தேதி அவர்கள் வாங்கும் தங்கம் வைரம் முதலிய பொருட்களை வைத்து பூஜை செய்வர்.

தீபாவளி திருநாள்:

தீபாவளி அன்று சூரியன் உதிப்பதற்கு முன்பே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் பொழுது சுரைக்காய் பொடி போன்றவற்றை சேர்த்துக் கொள்வதால் லட்சுமி கடாட்சம் சேரும் என கூறுவர். வட மாநிலத்தவர் அன்று காலையில் உள்ள சுபம் முகூர்த்தத்திலேயே பூஜை செய்வர்.

லட்சுமி குபேர பூஜை:

தீபாவளி அடுத்து லட்சுமி குபேர பூஜை. அன்று அம்மாவாசை வருவதையொட்டி லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வம் பெருகும். அந்நாளில் குபேரர் முன்னிலையில் கலசம் வைத்து 21 அரளி பூக்களை கொண்டு பூஜை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி ஏழை எளியவர்களுக்கு கம்பளி போன்ற ஆடை தானம் வழங்குவது மிகவும் நல்லது.

யம துவிதி:

இறுதியாக 26 ஆம் தேதி யம துவிதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நிறைவு பெறுவதையொட்டி, சகோதரர் மற்றும் சகோதரிகளின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட வேண்டும். பின்பு சகோதரர் மற்றும் சகோதரிக்கு பிடித்த பரிசினை கொடுத்து பரிமாறி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் தீபாவளி பண்டிகை மிகவும் மகிழ்ச்சியுடன் நிறைவடையும் எனக் சாஸ்திர ரீதியாகவே கூறுகின்றனர்.