ரயிலில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம் !! பெண்களிடையே பெரும் வரவேற்பு !!

0
69

ரயிலும் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தியன் ரயில்வே “எனது தோழி” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தென் கிழக்கு ரயில்வே மூலம் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக “எனது தோழி” என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது பெண்களிடையே வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அனைத்து இந்தியன் ரயில்வே மண்டலத்திலும் விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயிலில் பயணிக்கும் பெண்கள், குறிப்பாக தனியாக பயணிக்கும் பெண்களுக்கு, ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவல்துறையினர் தொடர்புகொண்டு பயணத்தின்போது மேற்கொண்ட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கூறுவர்கள்.பயணத்தின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் 182 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.

“எனது தோழி” திட்டத்தின் மூலம் இரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் இருக்கை எண், ரயிலின் பெட்டி எண் ஆகியவற்றை சேகரித்து ரயில் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள ரயில்வே காவல் துறையினர் (ஆர்பிஎஃப்) அந்தந்த ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவிப்பார்.

தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், ஒவ்வொரு நிறத்திற்கும் தனது தகவல்களை சேகரிப்பார்கள். சேர வேண்டிய இடம் வந்ததும் பெண் பயணிகளிடம் இது குறித்த கருத்துக்களை ஆர்பிஎஃப்) குழுவினர் சேகரித்து , மேலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தம் செய்வார்கள்.

மேலும் “எனது தோழி” திட்டத்தின் மூலம் பயணிக்கும் பெண் பயணிகளுலிருந்து வரும், அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here