ஆசிரியர்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா என ஆய்வு செய்ய மத்திய மாநில அரசு உத்தரவு?

0
40

நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுடைய ஆசிரியர்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா? என ஆய்வு செய்ய தமிழக அரசு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
அந்நாளில்,ஆசிரியர்கள் கற்பித்தல் மட்டுமின்றி, மாணவர்கள் நலனுக்காக மற்றும் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தேர்வு செய்து மத்திய மாநில அரசு சார்பில் நல்லாசிரியர் விருது மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் நிகழாண்டுக்கான அதாவது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி நல்லாசிரியர் விருது தருவதற்கான ஆசிரியர் தகுதி பட்டியலை மத்திய மாநில அரசுகள் தயார் செய்து உள்ளன.இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களை இறுதி செய்யும் முன்பு அவர்களுக்கு ஏதேனும் குற்றவியல் பின்னணி உள்ளதா என ஆய்வு செய்யுமாறு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மத்திய மாநில அரசுகளால் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறை மூலமாக நல்லாசிரியர் பட்டியலில் உள்ளவர்களின் தகுதியையும் அவர்கள் மீது ஏதேனும் பின்னணி குற்றவியல் வழக்கு இருக்கிறதா என்பதையும் ஆய்வு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
Pavithra