மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

0
97
மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்
மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்

மகன் இறப்பிற்குப் பிறகு மருமகளை கரம் பிடித்த மாமனார்! இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த திருமணம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் கடந்த காலத்தில் இரண்டாம் திருமணம் செய்வது பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த சூழல்கள் மாறி தன் மருமகளையே மறுமணம் செய்த மாமனார் இது போன்ற செய்திகளையும் கேட்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

உத்திர பிரதேச மாநிலம் பதங்கஞ்ச கோட்டவாலி பகுதியில் உள்ள சாபீயா உம்ராவ் கிராமத்தில், வசிப்பவர் கைலாஷ் யாதவ், இவர்தான் அந்த மாமனார். இவர் பார்ஷல்கஞ்ச் காவல் நிலையத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கைலாஷ் யாதவியின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இவருக்கு  நான்கு குழந்தைகள் உள்ளன முதல் இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிய நிலையில் மூன்றாவது மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமான சிறிது காலத்திலே கைலாஷ் யாதவ் மூன்றாவது மகனுமான பூஜாவின் கணவன் விபத்தில் இறந்து இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் பூஜாவிடம் அறிவுரைகளை கூறி இரண்டாம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் பூஜாவோ இரண்டாம் கணவன் குடும்பம் எனக்கு பிடிக்கவில்லை ஆதலால் நான் முதல் கணவன் வீட்டிலேயே இருக்கிறேன் என்று கூறிவிட்டு கைலாஷ் யாதவ் வீட்டில் வந்து தஞ்சம் புகுந்தார். கணவன் இல்லாத குறையை வீட்டிலிருந்து தணிக்க வேண்டும் என்ற கருத்தினை கொண்ட பூஜா தன் மாமனாரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் பூஜா தனது இல்லற வாழ்க்கையில் சந்தோசமாக தான் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரசியல் பிரசலமாக விவாதங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதன் பின்னர் இந்த திருமணம் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய வருவதை அடுத்து காவல் துறைக்கு தெரிய வருகிறது. பிறகு பர்ஷல் கஞ்ச் காவல்துறை பொறுப்பு காவலர் சென்று விசாரித்த போது இரண்டு நபர்களும் முழு சம்மதத்துடன் தான் திருமணம் செய்து உள்ளோம் என்று கூறியதால் நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக என் கணவனை விட என் மாமனார் தன்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார் என்று கூறியதாக காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.