கடன் பிரச்சனை திருமண பிரச்சனையை நீக்கும் சோமவார விரதம்!!

0
103

பொதுவாக அனைவரும் அவர்களின் குலதெய்வம் சிறப்பு நாட்களுக்கு ஏற்ப விரதமிருந்து பூஜை செய்வர்.எடுத்துக்காட்டாக கூறினால் அம்மனை குலதெய்வமாக கொண்டவர்கள் வெள்ளிக்கிழமையும் பெருமான் பகவானை குலதெய்வமாகக் கொண்டவர்கள் சனிக்கிழமையும் விரதம் இருப்பர்.ஆனால் சோமவார விரதம் என்பது மற்ற நாட்களில் விரதம் இருப்பதை விட மிக மிகச் சிறந்த மற்றும் கூடிய விரைவில் பலன்களை தரவல்ல ஒரு விரதமாகும்.

சோமவார விரதம் என்றால் என்ன?

சோமவார விரதம் என்பது வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை-யை குறிப்பிடும்.சோமம் என்பது சந்திர பகவானை குறிப்பதாகும்.இந்த நாளில் தான் சிவபெருமான் சந்திரனுக்கு வரம் அளித்த நாளாகும்.இந்த நாளில் நாம் சிவபெருமானை நினைத்து நம் விரதம் இருப்பின் நினைத்த காரியம் நடக்கும்.

சோமவாரம் விரதம் இருக்கும் முறை:

21 சோமவாரம் நாம் விரதம் இருக்கவேண்டும் அதாவது 21 திங்கட்கிழமை விரதமிருந்து சிவனை வழிபட வேண்டும்.

சிவலிங்கம் வைத்து வழிபடுவார்கள் பாலபிஷேகம் செய்து வில்வம் இலையால் பூஜை செய்ய வேண்டும்.

உருவ போட்டோ வைத்திருப்பவர்கள் வில்வம் இலை கொண்டு வழிபட வேண்டும்.வில்வம் இலை கொண்டு வழிபடுதல் மிக மிக முக்கியமானதாகும்.

காலை எழுந்தவுடன் நீராடி சிவபெருமானை நினைத்து வில்வம் இலை கொண்டு சிவனின் ஏதாவது ஒரு திருநாமத்தை பாடி மனதோடு வேண்டி மாலை 6 மணி வரை விரதம் இருக்க வேண்டும்.மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்து சிவபெருமானை உள்ளன்புடன் வேண்டி நாம் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு 21 சோம வாரங்கள் நாம் விரதம் இருப்பின் கடன் தொல்லை,திருமண பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை, நோய் பிரச்சனை இது போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

அதுவும் ஆடி அமாவாசையான இன்று சோமவாரத்தில் வருவதால் இந்த விரதத்தினை இன்றிலிருந்து நாம் இந்த விரதத்தினை
மேற்கொண்டுடால் மிகவும் நல்ல பலன்களை தரும்.

முக்கிய குறிப்பு:
மாலை வரை உண்ணாமல் இருப்பது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப வையாகும்.பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் வாரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதற்கு அடுத்த வாரத்திலிருந்து கணக்கை எடுத்துக் கொண்டு மொத்தம் இருபத்தி ஒரு வாரம் இருக்க வேண்டும். (அதாவது 4 வாரங்கள் விரதம் முடிந்து இருப்பின் ஐந்தாவது வாரம் மாதவிலக்கு ஆனால் அந்த வாதத்தை விட்டுவிட்டு ஆறாவது வரத்தை நாம் ஐந்தாவதாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

கடன் தொல்லை தீர நோய்கள் குணமாக இதுபோன்ற காரணங்களால் விரதம் மேற்கொள்வர் தேய்பிறை சோமவாரத்தில் திருமணத்திற்காக அல்லது குழந்தை பாக்கியத்திற்காக விரதம் மேற்கொள்பவர்கள் வளர்பிறை சோமவாரத்தில் தன் விரதத்தை தொடங்க வேண்டும்.

author avatar
Pavithra