அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

0
164

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக பந்து வீசி இந்திய அணியின் உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்தார்.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று டி20 போட்டிகளின் முதல் நாள் ஆட்டம்  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பம் ஆகியது.

ரோகித் சர்மா, கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அணியை வழிநடத்தினார்.இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா 41 ரன்கள் அக்சர் பட்டேல் 31 ரன்கள் எடுத்து ஆட்டமே இல்லாமல் களத்தில் நின்றனர்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இலங்கை அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை ருசித்தது.

இந்திய அணி சார்பில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என நினைக்கும் பொழுது இலங்கை கேப்டன் ஷனகா அதிரடியாக ஆடி வெற்றியை தங்கள் பக்கம் கொண்டு சென்றார். 16 ஓவரின் முடிவில் 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து 17 ஆவது ஓவரை இந்திய அணியின் வேதபந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் வீசினார். உம்ரானின் பந்தில் 0,6,0  என எடுத்த ஷனகா நான்காவது பந்தில் ஷாகலிடம் கேட்ச் ஆனார்.  இவர் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். ஷனகாவிற்கு பந்தை உம்ரான் 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் போட்டியின் இது வேகமான பந்துவீச்சாகவும் இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் அதிவேகமாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ராவின்(153.36கி.மீ) சாதனையையும் உம்ரான் முறியடித்தார்.  இதனை அடுத்து இந்திய பந்துவீச்சாளர்களில் அதிவேகமாக பந்து வீசி அவர்களில் முதலிடத்தில் தற்போது உம்ரான் உள்ளார்.