Connect with us

Breaking News

மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

Published

on

மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

கிசான் நிதி திட்ட முகாம் விவசாயிகள் பங்கேற்பு மத்திய அரசை போல மாநில அரசும் விவசாய ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

Advertisement

கிஷான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்குவது போல மாநில அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் அடையாதவர்களுக்கு கோவை மாவட்டம் சூலூரில் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் ஆவணங்களை பதிவு செய்யாதவர்களுக்கு பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

Advertisement

கோவை மாவட்டத்தில் மட்டும் 62 ஆயிரத்து 198 பேர் இதனால் பயன்பெற்றுள்ளனர். சூலூர் பகுதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதனால் பயன்பெற்றுள்ளனர்.
இதில் 2000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்யாமல் ஊக்கத்தொகை பெறாமல் இருப்பதன் காரணமாக இந்த சிறப்பு முகாம் ஆனது நடைபெற்றது.

Coimbatore

Coimbatore

இங்குள்ள பேரூராட்சி மற்றும் வேளாண்மை அலுவலகங்களில் இந்த ஆவணங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. விவசாயிகள் அவர்களுடைய ஆதார் ரேஷன் கார்டு ஆவணங்களைக் கொண்டு மத்திய அரசின் கிசான் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வேளாண்துறை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயி தண்டபாணி தந்தி டிவி இடம் பேசும் பொழுது கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது என்பது வரவேற்கத்தக்கது. இதனால் விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். மத்திய அரசை போல மாநில அரசும் இது போன்ற ஊக்கத்தொகைகள் தரவேண்டும் என தெரிவித்தார்

Advertisement