விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி கடன் பெற்றவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பட்ஜெட்டில் வெளிவந்த முக்கிய தகவல்!

0
223
Farmers and women self-help borrowers hit the jackpot! Important information released in the budget!
Farmers and women self-help borrowers hit the jackpot! Important information released in the budget!

விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி கடன் பெற்றவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பட்ஜெட்டில் வெளிவந்த முக்கிய தகவல்!

2023 2024 ஆம் நிதி  ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. திமுக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காகிதம் இல்லாத இ பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

தற்போது அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்து வருகின்றது. கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கை முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய கடன் தள்ளுபடி 2391 கோடி ரூபாய், நகை கடன் தள்ளுபடி ஆயிரம் கோடி மற்றும் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி 600 கோடி என மொத்தம் 393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கும் 305 கோடி மற்றும் சிறுபான்மை சமூக மாணவர்களின் நலத்திட்டங்களுக்கு ரூ 1580 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K