Breaking News
இந்த பேருந்துகளின் கட்டணம் உயர்வு? தனியார் பஸ்களின் வருவாய் குறைய வாய்ப்பு!

இந்த பேருந்துகளின் கட்டணம் உயர்வு? தனியார் பஸ்களின் வருவாய் குறைய வாய்ப்பு!
போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மினி பேருந்துகள் 16 கிலோமீட்டர் வரை தேவை இல்லாத வழித்தடங்களில் 4 கிலோ மீட்டர் முக்கியசாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 4902 மினி பேருந்துகள் இயங்கி வருகின்றது.
அவற்றின் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. அதனால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் முக்கிய சாலைகளில் மேலும் சிறிது தூரம் வரை செல்ல மினி பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் எனவும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரம் முக்கிய சாலைகளின் மினி பேருந்துகளின் தூரத்தை அதிகப்படுத்தினால் தனியார் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என அவற்றின் உரிமையாளர்களும் தெரிவித்து வந்தனர்.
அவற்றை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை சார்பில் மினி பேருந்து திட்டம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதோடு கிராமங்களில் அதிக தூரம் செல்லும் பேருந்துகளுக்கு ஊக்கத்தொகை மினி பேருந்துகளை மேலும் சிறிது தூரம் செல்ல அனுமதி என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு திட்டம் குறித்து விவரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.