சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ்

0
93
Fantastic 5 Tips to Add Flavor to Cooking # 5 Tips
Fantastic 5 Tips to Add Flavor to Cooking # 5 Tips

சமையலில் சுவையை கூட்ட அருமையான 5 டிப்ஸ் #5டிப்ஸ்

வற்றல்:

ஜவ்வரிசி அல்லது அரிசி கூழ் கிளறும் போது கசகசாவை பொடி செய்து அதில் போட்டு கிளறி வடாம் அல்லது வற்றல் பொறித்தால் வற்றல் தனி சுவையாக இருக்கும்.

எண்ணெய் பலகாரம்:

எண்ணெய் பலகாரம் செய்யும் போது எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு புளி சேர்த்து கருகும் வரை விட்டு பின் புளியை எடுத்து எறிந்து விட்டு பின் பலகாரம் பொரிதல் எண்ணெய் காரல் இல்லாமல் இருக்கும்.

பூரி :

பூரிக்கு மாவு பிசையும் போது அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்து பூரி சுட்டால் பூரி நிறைய நேரம் நமுத்துப் போகாமல் இருக்கும்.  பூரி நன்கு உப்பிவரும்.

முறுக்கு:

மைதா மாவை பிசையும் போது தண்ணீர் ஊற்றாமல் ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு நீர் ஆவியில் வேகவைத்து எடுத்து தேவைக்கு ஏற்ப உப்பும் நெய்யும் சேர்த்து பிசைந்து முறுக்கு சுட்டால் முறுக்கு கரகரப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

ரசம் :

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் அதை ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சுண்டல் வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அதை ரசத்தில் சேர்த்தால் ரசத்தில் புது சுவை கூடும்.

author avatar
CineDesk