சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

0
77
Famous paranoid doctor dies in Salem What is the cause of death?
Famous paranoid doctor dies in Salem What is the cause of death?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார்.இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.இவரைத் தேடி வெளியூர்களில் இருந்தும் மருத்துவம் பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள்.இவரும் மாதம் தோறும் வெளியூர்களுக்கு சென்று முகாம் நடத்தி மருத்துவம் பார்ப்பது வழக்கம்.

இவரது மருத்துவம் பற்றிய தகவல்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வரும்.இது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் தினந்தோறும் மருத்துவ குறிப்புகளை கூறி வருவார்.

இவரது  சித்த மருத்துவத்தால் பல பேர் நன்மை பெற்றுள்ளனர்.இவருக்கு பிறகு இவரது பிள்ளைகளும் இவர் வழி சித்த மருத்துவ தொழிலையே செய்து வருகின்றனர்.1990 களில் இருந்து சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது.இவர் பால்வினை தொடர்பான சித்த மருத்துவத்தில் பேர்பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

இவரது இழப்பால் சேலம் சார்ந்த மக்கள் சோகத்தில் உள்ளனர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் இவருக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்