இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா?

0
83

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்! இத்தனை தயாரிப்பாளர்களா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார்.இவர் கோயம்புத்தூரை சேந்தவர் ஆவார்.இவர் எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு சிறிது காலம் வங்கியில் பணபுரிந்தார்.இவருக்கு திரைப்படம் இயக்கும் ஆர்வம் நாளடைவில் வந்தது.ஆரம்பத்தில் குறும்படங்கள் இயக்கியும் வந்தார்.இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இருந்த குறும்பட போட்டியில் போட்டியாளராக லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இவருக்கு ஊக்கம் அளித்தார்.

இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2016ம் ஆண்டு அவியல் என்ற குறும்படத்தை தயாரித்தார்.இந்த குறும்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் 2017ம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தை தமிழ் சினிமாவில் முதல்முறையாக இயக்கினார்.இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.வசூல் ரீதியாகவும் நல்ல ஹிட்டானது.

இதன்பின்னர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் பாடல்கள் இல்லாத திரைப்படமாகவும் கதாநாயகி இல்லாத திரைப்படமாகவும் வெளியானது.ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.இந்த திரைப்படமும் மெகா ஹிட் ஆனது.ரசிகர்களிடையே நல்ல இடத்தை அவர் இந்த படங்களின் மூலம் பிடித்தார்.இதன்பின்னர் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

இந்த திரைப்படம் 2021ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது.படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.இந்த படத்தின் மூலம் மூன்றாவது படத்திலேயே முன்னணி நடிகருடன் இணைந்த பெருமை அவருக்கு கிடைத்தது.இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ஆவார்.அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.இந்த படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போதே தனது அடுத்த படத்திற்க்கான அறிவிப்பையும் அவர் கொடுத்துள்ளார்.தான் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை ரெயின் ஆன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிறுவனத்தை முன்னணி இயக்குனர்களான மணிரத்னம்,ஷங்கர்,மிஷ்கின்,வெற்றிமாறன்,சசி,வசந்தபாலன்,பாலாஜி சக்திவேல்,முருகதாஸ்,லிங்குசாமி,கவுதம்மேனன் ஆகியோர் சேர்ந்து நடத்துகின்றனர்.ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இத்தனை பேர் சேர்ந்து இருப்பது தமிழில் இதுவே முதல் முறையாகும்.

author avatar
Parthipan K