பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்? பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள்ஆர்வம்!

0
65
Famous director entering Bollywood! Huge alliance fan interest!
Famous director entering Bollywood! Huge alliance fan interest!

பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்! பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள் ஆர்வம்!

தற்போது கோலிவுட்டில் அனைவராலும் பேசப்பட்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய விக்ரம் திரை  படம் 400 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலை பெற்றுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் கூட்டணி சேர்க்கிறார். தளபதி 67 படத்தை அவர் இயக்கவுள்ள நிலையில் அதற்கான கதை பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார் என தகவல் வெளியாகியயுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருவரும் கூட்டணி சேர இருப்பதாக பாலிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி ப்ரோடக்ஷன்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் சமீபத்தில் ஹைதராபாத்தில் சல்மான் கான் மற்றும் லோகேஷ் சந்தித்து கொண்டதாகவும், அப்போது லோகேஷ் கூறிய கதையை சல்மான் கான் ஓகே செய்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Parthipan K