விஜய்யுடன் இணைந்து நடிக்க ஏங்கும் பிரபல நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
130
Famous actress who wants to act with Vijay! Fans in anticipation!
Famous actress who wants to act with Vijay! Fans in anticipation!

விஜய்யுடன் இணைந்து நடிக்க ஏங்கும் பிரபல நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் நடித்த  பீஸ்ட் படமானது  ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள்   வெளிவந்தது. அதனையடுத்து விஜய் நடித்து வந்த விஜய் 66 எனும் அடைமொழி கொண்டுள்ள தலைப்பு  தேர்வு செய்யப்படாத படத்தில்  ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையை கொன்டு உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் நடைபெற்றது.

பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உருவாகும் இந்தப் படப்பிடிப்பில் முக்கியமான பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.’விஜய் 66′ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் 66 என அடைமொழி கொண்ட இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டது. தளபதி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷி கண்ணா (31) நான் விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும். விஜய்யுடன் இணைந்து நான் நடித்தால் போதும் என்றும் அது என்னுடைய கனவு விரைவில் நிறைவேறும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K