காலமானார் புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர்!

0
79

வியாசர்பாடியைச் சேர்ந்த புகழ் பெற்ற 5 ரூபாய் டாக்டர் என அறியப்படும் திருவேங்கடம் வீரராகவன் மருத்துவர் காலமானார். அவருக்கு வயது 70.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியிலும் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, சிகிச்சைக்கான கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். 70 வயதான மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.

1973இல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்றவர், முதலில் அவர் இரண்டு ரூபாய்க்கு மட்டுமே வைத்தியம் பார்த்து வந்தார். அவன் பிறகு சில வருடங்கள் கழித்து 5 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இவரது இந்த குறைந்தபட்ச மருத்துவ சேவைகளை எதிர்த்து மற்ற மருத்துவர்கள் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பினை எதிர் கொண்டார். இருந்தாலும் தனது இறுதிக்காலம் வரை அவர் 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இவர் காலை 9 மணி முதல் 12 மணி வரை எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியில் மாலை 7.30 மணியிலிருந்து 9 மணிவரை இறுதிவரை மருத்துவம் பார்த்து வந்தார்.

இவரின் இந்த சேவையினை எதிர்த்து மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அவரிடம் அதுபற்றி கேட்ட போது, “நான் படிக்கும் காலத்தில் கட்டணம் இல்லாமல் தான் மருத்துவம் படித்தேன், அதேபோல எனது மருத்துவ சேவையும் கட்டணம் இல்லாமல் தான் இருக்க வேண்டும் என எண்ணினேன். அவனால்தான் வெறும் 5 ரூபாயில் எனது கட்டணத்தை வைத்துக் கொண்டேன்” எனக் கூறினார்.

இவரது மருத்துவ சேவையினை பாராட்டிய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த மனிதருக்கான விருதினை அளித்தது. இவரது மனைவி ஓய்வுபெற்ற ரயில்வே துறை ஊழியர் ஆவார். இவரது மகன் தீபக் மற்றும் மகள் ப்ரீத்தி மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் தான். இதனால் குடும்பத்தினர் தலைப்பிலேயே 5 ரூபாய் கட்டணத்திற்கு மருத்துவம் பார்க்க முடிந்தது எனக்கூறிய திருவேங்கடம் வீரராகவனுக்கு வியாசர்பாடியில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்பதுதான் அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது.

author avatar
Parthipan K