கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம்! எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

0
96

தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் காலகட்டத்தில் நீதிமன்றத்தில் பெரும்பாலும் காணொளி மூலமாகவே வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக பல வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அதுமட்டுமின்றி பல வழக்கறிஞர்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தும் உள்ளனர். தற்போது அவர்கள் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் இருந்து நிதி உதவி வழங்க வேண்டும், என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, தற்போதைய கொரோனா என்னும் பெரும் தொற்று காலத்தில் ஒன்றரை வருடங்களாக நீதிமன்றங்களில் பெரும்பாலான நாட்கள் காணொளி மூலமாகவே ஆன்லைன் மூலமாகவே நடந்தது. வழக்கு விசாரணை காணொளி மூலமாகவே நடைபெற்று வந்தது. அதனால் நேரடி விசாரணை என்று நடக்கும் நிலை இல்லை. அதனால் மூத்த வழக்கறிஞர்கள் வாதம் திறமைகளை நேரில் பார்த்தால் வாதி பிரதிவாதி நேரடியாக பேசி அவர்களின் குறைகளை தெளிவாக கேட்க கூடிய நிலைமை போன்ற பல நேரடி பயிற்சிகள் பெற முடியாத நிலையில் உள்ளது.

பெரும்பாலான வழக்கறிஞர்கள் பொருளாதாரத்தை இழந்துவருகின்றனர். கடந்த 2021 பிப்ரவரி சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரிடர் காலத்தில் வாழ்வில் இந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பேருந்து ஆட்டோ டாக்சி ஓட்டுநர் வழக்கறிஞர்கள் குமாஸ்தாக்கள் ஆகியோரினால் இந்த காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என மனு வழங்கினர். ஆனால் தமிழகத்தில் அதற்கு முன்னே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் அரசு முதல் கட்டமாக பேரிடர் காலத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும் அவர்களின் குமாஸ்தா களுக்கும் நிவாரண உதவியாக வழங்கிட வேண்டும். அதேபோல் தோற்றால் பாதிக்கப்பட்டு பலியாகிய வழக்கறிஞர்களில் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று எடப்பாடிபழனிசாமி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
Kowsalya