கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்! 

0
144

கந்து வட்டி கொடுமை பலியாகும் குடும்பங்கள்! வழக்கறிஞரின் விபரீத செயல்! 

கந்து வட்டி கொடுமையால் குடும்பங்கள் அழிவதை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் விபரீதமான ஒரு செயலை செய்துள்ளார்.

குடும்ப சூழ்நிலைக்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நபர்கள் அதிக வட்டியை கட்ட இயலாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன.  வட்டி கட்ட முடியாமல் போனால் ஆள் வைத்து மிரட்டுவது,  தாக்குதல் நடத்துவது, போன்ற காரணங்களினால் கடன் வாங்கியவர்கள் பயந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தது.

இதனை தடுக்க அதிக வட்டி வசூல் செய்வதை தடுக்க அதீத வட்டி வசூல் தடை சட்டம் 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் சில இடங்களில் கந்து வட்டிகளின் கொடுமை நிகழ்ந்து கொண்டு தன் இருக்கிறது. இத்தகைய கந்து வட்டி கொடுமையை கண்டித்து வழக்கறிஞர் ஒருவர் புளிய மரத்தில் தலைகீழாகத் தொங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் அய்யலுச்சாமி. இவர் காங்கிரஸில் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் அய்யலுச்சாமி கயத்தாறு தாலுகா மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கந்து வட்டி கொடுமையால் பலியாகும் குடும்பங்களின் சம்பவங்களை கணக்கிட வேண்டும்.

மேலும் கந்து வட்டி சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் வினோதமான முறையில் புளிய மரத்தில் தலைகீழாக தொங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதற்காக கடம்பூர் காட்டுப்பகுதியில் உள்ள புளிய மரத்தில் தனது காலில் கயிற்றினைக் கட்டி தலைகீழாக தொங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய அவர் சுமார் ஒரு மணி நேரம் தலைகீழாக மரத்தில் தொங்கி போராட்டம் நடத்தினார். இது அந்த பகுதியில் மிகவும் பரபரப்பானது.