வருமான வரி செலுத்தாமல் டேக்கா கொடுத்த செல்போன் நிறுவனம்! அதிரடி சோதனையில் இறங்கிய வருமானவரித்துறை!

0
88

அனைத்து பெரு நிறுவனங்களும் வருமான வரி செலுத்த வேண்டும் என்பது விதி, ஆனால் அவ்வளவு எளிதில் வருமான வரியை யாரும் செலுத்தி விடுவதில்லை. தங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தை வெளியில் குறைத்து கணக்கு காட்டி வருமான வரித்துறையில் இருந்து தப்பிப்பது எவ்வாறு என்று தான் அனைவரும் சிந்திக்கிறார்கள் இது தொழில் நிறுவனங்களிடம் மட்டும் அல்லாமல் மிகப் பெரிய அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், உள்ளிட்ட பலரிடமும் இருக்கும் தந்திரமாக இருந்து வருகிறது.

ஆனாலும் வருமான வரித்துறையும் இதனை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி பல இடங்களில் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்து வருகிறது வருமானவரித்துறை.

இந்த நிலையில் ஓப்போ செல்போன் நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன. அதனடிப்படையில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கின்ற அந்த செல்போன் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் இந்த நிறுவனத்திற்கு தொடர்பு இருக்கின்ற பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சென்னை, மும்பை, டெல்லி, உள்ளிட்ட நகரங்களில் இருக்கின்ற இந்த நிறுவன அலுவலகங்கள் மற்றும் அனைத்து நகரங்களிலும் சோதனை நேற்றையதினம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கின்ற செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை உட்பட இருபதுக்கும் அதிகமான பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, செல்போன் நிறுவனம் முறையாக வருமான வரி கணக்கை செலுத்தவில்லை என்ற புகார் வந்தது. இதனால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது, தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சென்னை, உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறார்கள்.

அத்துடன் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் ஆய்வு நடைப்பெற்று வருவதன் காரணமாக, சோதனையைத் தொடர்ந்து நடைபெறும் இதற்கு பின்னர்தான் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்களின் மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.